ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் : எல்லையில் போர்ப் பதற்றம்!
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதோடு, 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளதுடன், மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் போர் விமானங்கள்
இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறாக, பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா அல்லது போருக்கு தயாராகின்றதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றமும் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
