கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல்!
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) 'ஷாஜஹான்' நேற்று (02.06.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
பிஎன்எஸ் 'ஷாஜஹான்' என்பது 134 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ விஜயம்
குறித்த கப்பலின் தலைவராக அட்னான் லகாரி டிஐ தலைமை தாங்குகிறார்.
இந்தநிலையில் அவர் இலங்கையின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இரண்டு நாள் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் கப்பலில் பயணிப்பவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, 'ஷாஜஹான்' ஜூன் 04 நாளைய தினம் இலங்கையில் இருந்து புறப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
