பாகிஸ்தான் கடற்படை நடத்தும் பன்னாட்டு கடற்படைப் பயிற்சிக்காக செல்லவுள்ள சமுதுரா கப்பல்
பாகிஸ்தான் கடற்படை நடத்தும் பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான அமானில் பங்கேற்பதற்காக, இலங்கையின் சமுதுரா கப்பல் கராச்சி துறைமுகத்திற்கு புறப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமானின் எட்டாவது பதிப்பில் இந்த கப்பல் பங்குகொள்கிறது.
இந்த ஆண்டு பயிற்சியின் கருப்பொருள் 'அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஒன்றாக', என்பதாகும். இந்த பயிற்சி பெப்ரவரி 10 முதல் 14 வரை கராச்சியில் நடைபெறும்.
பன்னாட்டு கடற்படைப் பயிற்சி
110 நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் இந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான உதவி, கடலில்
நிரப்புதல்,சூழ்ச்சி மற்றும் உருவாக்கம், துப்பாக்கிச்சூட்டு நடைமுறைகள்
மற்றும், மனிதாபிமான உதவிகள் என்பன இந்த பயிற்சிகளில் இடம்பெறவுள்ளன.

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
