ஜனாதிபதியை சந்தித்த பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27.02.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் நடவடிக்கைகளை பரந்தளவில் மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு நினைவு பரிசு
இந்த சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைப் பிரதானிகள் குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
