இலங்கை அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கடற்படை கல்லூரியில் பயிற்சி
பாகிஸ்தானின் கடற்படை கல்லூரி, நேற்று சனிக்கிழமையன்று, ஈராக், இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 49 மிட்சிப்மேன் அதிகாரிகள் மற்றும்; 29 குறுகிய சேவை ஆணையிடும் கெடற் அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
பாகிஸ்தான் இராணுவம், குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த நேச நாடுகளின் அதிகாரிகள் மற்றும் கெடட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வரும் நிலையிலேயே இந்த அணிவகுப்பு இடம்பெற்றதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பயிற்சிகளை பெற்ற அதிகாரிகள்
அணிவகுப்பின் தலைமை விருந்தினரான ஏர் சீஃப் மார்சல் ஜாகீர் அகமது பாபர் சித்து, பங்கேற்றார்
நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உயர்தர பயிற்சி அளித்து வருவது தொடர்பில் அவர், பாகிஸ்தான் கடற்படை கல்லூரியை பாராட்டியுள்ளார்.
பயிற்சிகளை பெற்ற இந்த அதிகாரிகள், பாகிஸ்தானுக்கும் தங்கள் நாட்டுக்கும்; தூதர்களாகப் பணியாற்றுவார்கள் அத்துடன், நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் பிணைப்பை வலுப்படுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |