பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் - தாக்குதல் நடத்திய நபர்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார்
எனவே கோபத்தில் அவரை கொல்லும் நோக்கத்திலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தியவர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார்
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நேற்று (03.11.2022) கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் எனவே கோபத்தில் அவரை கொல்லும் நோக்கத்திலேயே தாக்குதல் நடத்தியதாகவும் தம்மை எவரும் தூண்டிவிடவில்லை என்றும் துப்பாக்கிதாரி தெரிவித்தார்.
திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒருவர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டார்.
இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேநேரம் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
