இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் உலக நாடுகள்! இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டதாக கூறும் பாகிஸ்தான்
இலங்கையைப் போன்ற ஒரு நிலை பாகிஸ்தானில் தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இலங்கையப் போன்ற திவாலான நிலைக்கு செல்வது பாகிஸ்தானில் தவிர்க்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணிசமான கொள்கை மாற்றங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இலங்கையைப் போன்ற ஒரு நிலைமை தவிர்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பாதையில் பாகிஸ்தான் செல்லப்போகின்றது என்ற கவலை
எரிசக்தி இறக்குமதியின் அதிக விலை காரணமாக பாகிஸ்தான் நெருக்கடியின் விளிம்புக்கு தள்ளப்பட்டது. அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 9.8 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இது ஐந்து வார இறக்குமதிகளுக்கு போதுமானதாக இல்லை. அத்துடன் இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக பாகிஸ்தானிய ரூபாய் மிகக் குறைந்தளவு வரை பலவீனமடைந்தது.
எனினும் சர்வதேச நாணய நிதியம், கடந்த மாதம் பாகிஸ்தானுடன் பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதன் மூலம், கோரப்பட்ட 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் 1.17 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் இலங்கையின் பாதையில் செல்லப்போகிறது என்று கவலை இருந்தது. எனினும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தமையால், அந்தச் சூழ்நிலையை தடுத்துள்ளதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாகிஸ்தான் இப்போது சரியான திசையில் செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
