இந்திய இராணுவ இணையதளங்கள் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல்
இந்திய இராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்கள் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் மீதும் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் மேறடகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரில் கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காம் சுற்றுலா தல தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இந்த சைபர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |