இராணுவ விரிவாக்கத்தின் அடுத்த கட்டம்! அமெரிக்கவின் தீவிர முயற்சி
அமெரிக்கா இரண்டாவது முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்காவின் ஹைப்பர்சோனிக் திறன்களை விரைவாக மேம்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் ஏவுகணைகளை போலன்றி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த தொழினுட்பத்தை விரைவாகவும் மலிவாகவும் மீண்டும் செயல்பட வைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை ஆயுதங்கள்
இது அமெரிக்கா அடுத்த தலைமுறை ஆயுதங்களை உருவாக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரண்டு சோதனைகளிலும், இராணுவ விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஸ்ட்ராடோலாஞ்ச் டலோன்-ஏ ஹைப்பர்சோனிக் ஏவுகணை, பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து, வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் தரையிறங்குவதற்கு முன்பு மேக் 5 ஐ(ஏவுகணை ஒன்றின் பெயர்) விட அதிக வேகத்தை அடைந்தது" என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மேல் வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக அல்லது மணிக்கு சுமார் 6,200 கிமீ (3,853 மைல்கள்) வேகத்தில் பயணிக்கின்றன என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமல்லாமல், அவற்றைக் கண்டறிந்து பிராந்தியத்தை பாதுகாக்க புதிய அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சர்வதேச ஒப்பந்தக்காரர்கள் இந்த மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள நம்புகிறார்கள் எனவும் பென்டகன் தரப்பு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |