பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு
தெற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடரும் மீட்புப் பணிகள்
இந்த வெடிவிபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீத்தேன் வாயு கசிவினால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri