ஒரே நாளில் 13 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்ட தென்னாபிரிக்க டெஸ்ட்
சுற்றுலா பாகிஸ்தானிய(Pakistan) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(26) செஞ்சூரியனில் ஆரம்பமானது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால், 2025 சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நோக்கில், தென்னாபிரிக்க அணி முழு முயற்சியுடன் விளையாடி வருகிறது.
தென்னாபிரிக்க டெஸ்ட்
இந்தநிலையில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கம்ரன் குலாம் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன் பின்னர் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது 3 விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்தநிலையில், நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |