உலக கோப்பை தொடர்: பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
368 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 305 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.
இப் போட்டியில் சிறந்த ஆட்டநாயகனாக 124 பந்துகளுக்கு 163 ஓட்டங்கள் விளாசிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 368 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இருவர் சதம்
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சதங்களை கடந்தனர்.
டேவிட் வோர்னர் 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 163 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஸ் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீசில் சஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுக்களையும், ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.