கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்(Photos)
இராமநாதபுரம் மாவட்ட மண்டபத்தை அண்மித்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட படகு, நேற்று (12) இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாத்திரைகள் பறிமுதல்
இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
