உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் குற்றம் சுமத்துகின்றது பெப்ரல் அமைப்பு
அரசாங்க செய்தித் தொடர்பாளரின் சில அறிக்கைகளால் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற வாய்ப்பில்லை என்றும் பெப்ரல் அமைப்பு ( PAFFREL) தெரிவித்துள்ளது
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி,
மக்களின் ஜனநாயக உரிமை
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத வகையில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நிலை வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் ''தேர்தலை நடத்துவது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா'' என்பதே தற்போதைய கவலைக்குரிய கேள்வியாகும் என்றும் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
