கெஹல்பத்தர பத்மே விசாரணையில் திடீர் திருப்பம்.. இராணுவ அதிகாரி கைது!
கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி இன்றையதினம்(11.09.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோருக்கு துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவல்
இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே, சமீபத்தில் இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர் உட்பட கைது செய்யப்பட்ட 5 பாதாள உலகப் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri