திருகோணமலையில் இடம்பெற்ற பெரும்போக நெல் அறுவடை விழா
திருகோணமலை மாவட்ட உப்புவெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றிணைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா முத்து நகர் வயல் நில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனை குறித்த பகுதியில் இயங்கி வரும் விவசாய அமைப்புக்களான தகரவெட்டுவான், முத்து நகர், மத்திய வெளி ஆகிய விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
பாரம்பரிய விவசாய கலை கலாசார நிகழ்வுகள்
இதன்போது பெரும் போக நெல் அறுவடை இடம்பெற்றதுடன் பாரம்பரிய விவசாய கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து சிறப்பித்ததுடன் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உப்புவெளி கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |