ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள் : சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் பார்சல்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பார்சல்களை ஆய்வு செய்த போது இந்த போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு 2193 Ecstasy என்ற Methamphetamine மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் மருந்தும், 29 கிராம் Amphetamine போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
போதைப்பொருள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
விசாரணையில் அவை போலியான முகவரிகள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இந்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
