பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்து
பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M.Charles) தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கத்தினால் இன்று (05.05.2024) விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மேலும் உரையாற்றிய அவர்,
“போதைப்பொருள் பாவனையால் பெண்கள் அதிகளவில் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைபொருளுக்கு எதிரான பிரசாரங்களை செய்வதை விடுத்து, இளைஞர், யுவதிகளை மாற்று செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களின் திறன்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதற்காக தனது பணிப்புரைக்கு அமைய வடக்கு மாகாண விளையாட்டுத்துறை மற்றும் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து கிராமிய மட்டத்தில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும் போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.
அதற்கமைய நிலையான பொருளாதாரத்தை பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருளானது குடும்பங்களின் அடிப்படையை சிதைத்துக் கொண்டிருக்கும் நிலையில் , அதற்கு எதிராக செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ”என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
