கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் ஒக்சிஜன் பற்றாகுறை
கொழும்பு கிழக்கு ஆரம்ப வைத்தியசாலையான முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் நோயாளிகளுக்கு ஒக்சிஜனை வழங்க போதுமான கொள்கலன்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், நோயாளிகளின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் கையிருப்பில் 80 கொள்கலன்கள் இருந்த போதிலும் தினமும் 150 ஒக்சிஜன் கொள்கலன்கள் தேவைப்படுவதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 8 கட்டில்களில் நோயாளிகள் நிறைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேருக்கு நேற்றைய தினம் ஒக்சிஜன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் முதிதா பெரேரா தெரிவித்துள்ளார்.
தினமும் 150 ஒக்சிஜன் கொள்கலன்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் கொள்கலன்களை மே 15 ஆம் திகதி வழங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூச்சி விட சிரப்படும் நோயாளிகளே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு ஒக்சிஜனை வழங்குவது அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் முதிதா பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.