போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தின் உரிமையாளர் கைது
மட்டக்களப்பில் - ரூமேனியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்றுதருவதாக பல இலட்சம் மோசடி செய்த சந்தேகநபர ்ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலா 16 இலச்சம் ரூபா வீதம் 12 பேரிடம் பெற்று ஒருகோடியே 92 இலச்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கைக்காக இயங்கிவந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை இலங்கை வேலைவாய்பு பணியகத்தினர் இன்று முற்றுகையிட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 இலச்சம் ரூபா
தொடர்பாக தெரியவருவதாவது,
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்து வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் இல்லத்தின் உரிமையாளர், முகநூல் ஊடாக ரூமேனியா, போலாந்து, சேர்பியா போன்ற நாடுகளுக்களில் வேலைவாய்பு உள்ளதாக விளம்பரம் செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து வெளிநாட்டில் வேலைவாய்பு பெறுவதற்காக பலர் நேரடியாக குறித்த முகவர் நிலையத்துக்கு சென்று விண்ணப்படிவங்களை நிரப்பி கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மற்றும் பொலிஸ் நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 12 பேர் தலா 16 இலச்சம் ரூபா வீதம் 2023ஆம் ஆண்டு வழங்கியுள்ளனர்.
இருந்தபோதும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது நீண்டகாலமாக இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பிதருமாறு கேட்ட நிலையில் அதனை வழங்காததையடுத்து அவருக்கு எதிராக சிலர் மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பிலுள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசேட புலனாய்வு பிரி
இதனையடுத்து வேலைவாய்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளர் கபில கருணாரத்தின தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று பகல் குறித்த வேலைவாய்பு முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் போலியாக இயங்கி வந்துள்ளதுடன் ரூமேனியா போலாந்து, சோபியா மற்றும் ஜரோப்ப நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 கோப்புக்களை மீட்டமையும் குறிப்பிடத்தக்கது.