அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மரமுந்திரிகை செய்கை
தற்போது நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை பகுதியில் மரமுந்திரிகை செய்கை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,
"கடந்த காலங்களை விட இந்த ஆண்டு முந்திரிகை செய்கையில் குறைவான விளைச்சலே கிடைத்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக திருப்திகரமான விளைச்சலை பெறுவதற்கு முடியவில்லை. தற்போது முந்திரிப் பருப்பின் விலையும் குறைவாகவே காணப்படுகின்றது.
குறைந்த விலைக்கு விற்பனை
மேலும், 700 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய ஒரு கிலோ முந்திரி பருப்பின் விலை தற்போது 500 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இருப்பினும், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் கொள்வனவாளர்களே அதிக விலைக்கு இந்த பருப்பினை கொள்வனவு செய்கிறார்கள்.
ஆனால், அவர்கள் முந்திரிப் பருப்பினை கொள்வனவு செய்வதற்கு ஜூன் மாதத்திலேயே வருகை தருகிறார்கள்.
இவ்வாறிருக்கையில், அரசாங்கமும் எங்களுக்கான உதவிகள் எவற்றையும் வழங்குவதில்லை” என தெரிவித்துள்ளனர்.






| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri