மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 கைது
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 29,539 பேரை காவல்துறை சோதனை செய்ததுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 15 பேரை உட்பட மொத்தம் 493 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 179 பேருக்கு நீதிமன்ற பிடியாணைகள் நிலுவையில் இருந்ததுடன், மேலும் 88 பேருக்கு திறந்த பிடியாணைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri