யாழில் தீவிரமடையும் டெங்கு நோய் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று வைத்தியர் சி.யமுனானந்தா இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பழை மற்றும் பளை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர்.
எனவே, தற்போதுள்ள மழையுடனான காலநிலையில் டெங்குத் தொற்று பரவாமல் இருப்பதற்குச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதாலும், வீதிகளில் கழிவுகளைப் பொறுப்பற்ற விதத்தில் வீசாதிருப்பதாலும் டெங்குத் தொற்றிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri