எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாக எமது அரசியல் பயணம் தொடரும் - க.சுகாஷ்
திலீபனை நினைவேந்த முற்பட்டபோது கைது செய்யப்பட்ட எமது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜீவ்காந்த் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர் தங்கராஜா ராஜசிறீகாந்தன் ஆகியோரின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் (Kanakaratnam Sukash) தெரிவித்துள்ளார்.
அவர் தனது ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மேலும்,
விசேடமாக கைது இடம்பெற்றதிலிருந்து பிணையில் விடுவிக்கும்வரை களத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றி ஆதரவுக்கரம் நீட்டிய ஊடக உறவுகள், சட்டவிரோத கைதை கண்டித்து அறிக்கைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைத்தள உறவுகள், நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாக எமது அரசியல் பயணம் தொடருமென்று இன விடுதலைக்காக ஆகுதியாகிய ஆத்மாக்களின் மீது சபதமெடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri