சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எமது கட்சி வரவேற்கின்றது: வஜிர அபேவர்தன
"சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எமது கட்சி வரவேற்கின்றது." என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு, இன்றைக்கு மூன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது கட்சி ஆலோசனை வழங்கியது.
அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியது. எனினும், நெருக்கடி உச்சம் பெற்ற பின்னரே, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறும் முடிவை அரசு எடுத்துள்ளதும். இது காலம் கடந்த ஞானம்.
இருந்தாலும் தாமதித்தேனும் சிறந்த முடிவு எடுக்கப்பட்டதை வரவேற்கின்றோம்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அரசின் முடிவை
வரவேற்றுள்ளது.
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri