எதிர்வரும் தேர்தலில் பிள்ளையானின் இலக்கு
எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணை கிடைத்தால் நீர்ப்பாசன அமைச்சுத் தான் பெற வேண்டும் என்பது எமது இலக்கு என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பால திறப்பு விழாவில் இன்று (13.03.2024) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியள்ளார்.
நீர்ப்பாசன வீதி அபிவிருத்தி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பசுமை பொருளாதாரத்தை கட்டி எழுப்பதற்காகவே உலக வங்கியினால் 25 கோடி ரூபாய் மத்திய நீர் பாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறையை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமானால் மக்களுக்கு அறிவு சார்ந்த விடயங்களில் தெளிவு வேண்டும் ஜனாதிபதி கூறியதைப் போன்று அரசியல் பொருளாதார கட்டமைப்புக்களை திறம்பட நடைமுறைப்படுத்த நீர்ப்பாசனமும் வீதிகளும் இன்றியமையாததாகும்.
நீர்ப்பாசன வீதி அபிவிருத்தி பணிகள் இவ்வருடத்தில் மெதுவாக முன்னெடுக்கப்பட்டாலும் அடுத்த வருடத்தில் மிகப் பெரிய பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
சுற்றுலா துறை வளர்ச்சி
நாட்டின் நிலைமை தற்போது சிறப்பாக உள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன் சுற்றுலா துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அடையும் போது பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடையும்.
கிழக்குப் பல்கலைக்கழகம் விவசாய அபிவிருத்திக்கு சிறப்பாக செயல்படவில்லை. உயர்ந்த சம்பளத்திற்காக போராடும் அவர்கள் எனது கையால் வழங்கப்பட்ட மண்ணுக்குரிய அறிக்கையினை இதுவரை வழங்கவில்லை.
எனக்கே இவ்வாறான நிலைமை என்றால் மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். கல்வியில் உயர் பீடத்தில் உள்ள அவர்களின் நிலை இவ்வாறு இருந்தால் விவசாயிகள் எவ்வாறு உயர முடியும்.
இதற்கு கிராம மட்டங்களில் சிறப்பான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் சிறந்த மாற்றத்தினை நாம் காண முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |