யாழ். பலாலி ஊடான சென்னை விமான சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்
சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (12.3.2024) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து வட மாகாண ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
விமான நிலைய அபிவிருத்தி
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல் தொடர்பில் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
