கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்
இலங்கைத்தீவின் தான்தோற்றீஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று (14.06.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் கொடிஏற்றல் திருவிழாவிற்கான கொடிச்சீலை கற்சிலைமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பூசை வழிபாடுகளை தொடர்ந்து இன்றும் மதியம் கொடியேற்றம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பூஜை விபரங்கள்..
26.06.2026 நாள் அன்று (வெள்ளிக்கிழமை) வேட்டைத்திருவிழாவும் 27.06.2026 (சனிக்கிழமை) சப்பரத் திருவிழாவும் 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரதோற்சவமும் 29.06.2026 (திங்கட்கிழமை) தீர்த்தோட்சவமும் பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

ஆலய மகோற்சவ பிரதம குருவான சிவாகம ரத்தினம் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக்குருக்கள் தலைமையில் ஏனைய குருமார்களின் பாராயணங்கள் ஒலிக்க மங்கள வத்தியங்கள் முழங்கள பக்தர்களின் ஆரோகர கோசத்துடன் கொடியேற்றம் சிறப்புற நடைபெற்று பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வரர் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து சிறப்புற பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பராபவ வருட மஹோற்சவம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.







