விரைவில் பிற மதத் தலைவர்களும் குறிவைக்கப்படுவார்கள்..! பிக்குகள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் சம்பிக்க
விரைவில் பிற மதத் தலைவர்களும் குறிவைக்கப்படுவார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (12.10.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது துன்புறுத்தலுக்கு உள்ளாவது போலவே, விரைவில் ஏனைய மதத் தலைவர்களும் இதேபோன்று இலக்காக ஆக்கப்படுவார்கள்.
கொல்லப்பட்ட பிக்குகள்
பௌத்த பிக்குகள் வன்முறை மனப்பான்மை கொண்ட பிக்குகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால், 1989ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது 'குடபொல ராகுல பலகாய' அமைப்பை உருவாக்கி, 42 பிக்குகளைக் கொன்றது மக்கள் விடுதலை முன்னணி (JVP) தான்.
பிற மதத் தலைவர்களும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களும் விரைவில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan