துசித ஹல்லொலுவவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18.09.2025) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.
கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு
அத்துடன் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam