புதிய பாடத்திட்டம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
2029ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்று(16.06.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி மாற்ற செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்கள் ஒகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.
புதிய பாடத்திட்டம்
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2028ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டத்தின்படி, 2029ஆம் ஆண்டு சாதாரணத் தரப் பரீட்சை நடத்தப்படும்.
அத்துடன், 9 ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
