வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்
கொச்சியில் இருந்து டெல்லிக்கு(Delhi) புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம்
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் போலியானது என தெரியவந்ததை தொடர்ந்து விமானம் புறப்பட்டது.

இதேப்போல், டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் மற்றும் விமான விபத்து போன்ற காரணங்களால் விமானத்தில் பயணிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri