தேசபந்துவிற்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான கட்டளைகள்
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்வியை சிலத்தரப்புக்கள் அரசாங்கத்திடம் வினவியுள்ளன.
அவர் நீதிமன்ற கட்டளையை மீறி பல நாட்கள் வெளிவராமையை இது மேற்கோள் காட்டுகிறது. தேசப்பந்துவை கைது செய்யுங்கள் என்ற நீதிமன்றின் பிடியானைக்கு பிறகு தலைமறைவான அவர், இறுதியாக நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கடந்த 2023ம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில் மாத்தறை நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் எழுத்தாணையொன்றை கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன், அது நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் தேசபந்துவிற்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான கட்டளைகள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...,

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா... கொந்தளிக்கும் சர்வதேச அமைப்புகள் News Lankasri
