லெபனான் போர்நிறுத்தம் குறித்து ஈரான் சபாநாயகர் வெளியிட்ட தகவல்
ஈரானில் போர்நிறுத்தம் ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு லெபனானிலும் போர்நிறுத்தம் ஏற்படுவது தங்களுக்கு முக்கியமானது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
லெபனான் சபாநாயகர் நபி பெர்ரியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும், அதற்குப் பின்னரும் ஒரு நிரந்தர போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு ஈரான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
[WTKN19 ]
இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் நோக்கில் ஈரான் வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரை, காலிபாப் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தான் மத்தியஸ்தம் ஊடாக வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே தொடர்ச்சியாகத் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் முக்கிய இராஜதந்திர முகமாக உருவெடுத்துள்ள காலிபாப், பிராந்திய அமைதியை நிலைநாட்டப் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri