போலி ஆவணம் தயாரித்த சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பத்திரப்பதிவு செய்த போது போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியை பதவியில் இருந்து நீக்கி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக நீதித்துறை சட்டத்தின் 42(4) பிரிவின் படி சட்டத்தரணி மஹிந்த ரத்நாயக்க என்பவர் நான்கு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக, கண்டி மேல் நீதிமன்ற பதிவாளர், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்திருந்தார்.
விதிகளை மீறிய பிரதிவாதி
1999 ஆம் ஆண்டு ஒரு பத்திரத்தை சான்றளிப்பதற்கு பிரதிவாதியான சட்டத்தரணி, மோசடியான முறையில் சதி செய்ததாகவும், பத்திரத்தை சான்றளிப்பதில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், நோத்தாரிஸ் ஆணைச் சட்டத்தின் 31வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறும் வகையில் பிரதிவாதி செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற விசாரணையின் போது, பிரதிவாதி பிரமாணப் பத்திரம் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |