பசில் நடத்திய அவசர கூட்டம்! சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த செவ்வாய்கிழமை கூட்டப்பட்ட ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாக அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆளும்கட்சியின் அவைத்தலைவரின் அதிகாரிகளால் இந்த குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிப்புரைகள் அரசாங்க பிரதம கொறடா அலுவலகத்தில் இருந்து கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த குழு கூட்டத்திற்கு பல உறுப்பினர்களை அழைக்க சபை தலைவர் நடவடிக்கை எடுத்திருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆளும் கட்சிக் குழுவின் இந்த அவசரக் கூட்டம் சிங்கப்பூரில் உள்ள ஜனாதிபதிக்கும் தெரிய வந்துள்ளதுடன், அந்தச் சந்திப்பை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மீண்டும் ஒரு தடவை உறுப்பினர்களை அழைத்து கூட்டத்தை இரத்துச் செய்வதற்கு அவைத் தலைவரின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினம் பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். ஜனாதிபதியும் தனது சிங்கப்பூர் விஜயத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
