எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சுற்றுலா விசாவில் இந்தியா சென்று திருமணம் முடித்த இலங்கை பெண் ஒருவரை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை காதலித்துள்ளார்.
இந்நிலையில், லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மேலும், இந்த திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
