நிர்ணய விலையை விட அதிகமாக விற்பனை செய்தவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
நிர்ணய விலையை விட 100 ரூபாய் அதிகரித்து அரிசி விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபாரதம் விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று(06.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
வவுனியாவில் பாவனையாளர் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரச நிர்ணய விலையான 265 ருபாய் பெறுமதியான அரிசியை, 365 ரூபாய்க்கு விற்பனை செய்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக பாவனையானர் அதிகார சபையால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.