நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 11 இந்திய மீனவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு (PHOTOS)
யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய இழுவைப்படகுகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.
அதில் இருந்த 11 பேர் கைதுசெய்யப்பட்டு மயிலிட்டித் துறைமுகப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு இன்று காலை யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களை நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் இன்று மதியம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
