ஹரக் கட்டா தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவிக்காமல் 'ஹரக் கட்டா' எனப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இடமாற்றம் செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு நேற்றையதினம் (16.09.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான இறுதித் தீர்மானம் வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நடுன் சிந்தக சவால்
பொதுமக்கள் அமைச்சரால் தம்மீது பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் சட்டப்பூர்வ தன்மைக்கு இந்த மனு மூலம் நடுன் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் போதைப்பொருள் குழு தலைவரான நடுன் சிந்தக (ஹரக் கட்டா) மற்றும் அவரது நண்பரான சலிந்து மல்சிக குணரத்ன (குடு சலிந்து) உட்பட எட்டு பேர் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
