வெளிநாடுக்கு தப்பிச் செல்ல முயன்ற கொலைச் சம்பவமொன்றின் சந்தேக நபர் கைது
பாணந்துறையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றின் சந்தேக நபர் இன்றைய தினம்(22) விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரண பிரதேசத்தில் அண்மையில் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.
பொலிசாரினால் கைது
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபர் காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் முக அடையாளத்தின் ஊடாக ஆட்களை அடையாளம் காணும் கருவியின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[VA7LRSF





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 நிமிடங்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
