மட்டக்களப்பு- மயிலத்தமடுவில் அத்துமீறி குடியேறியவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Photos)
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஒரு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று(03)இது தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது குடியேற்றவாசிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் 1962ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதியில் 13குடும்பங்கள் வசித்துவந்ததாகவும் 1983ஆம் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் குறித்த பகுதியில் 12பேர் விடுதலைப்புலிகளினால் படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இடம்பெயர்ந்துசென்றதாகவும் மீண்டும் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குவந்ததன் பின்னர் அப்பகுதியில் மீள குடியமர வந்ததாகவும் மன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்த ஆவனங்களும் தங்களிடம் இல்லாத நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்தில் அப்பகுதியில் அவர்கள் வசிதததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு 13பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த ஆவனங்கள் யுத்த காலப்பகுதியில் காணாமல்போயுள்ளதனால் அவற்றினை அரச அதிகாரிகள் வழங்காத நிலையில் இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறியள்ளனர்.
குறித்த வழக்கானது எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் குறித்த வழக்கில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் குடியேறியுள்ள 13பேர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்ததுடன் மகாவலி அபிவிருத்தி திணைக்களம் சார்பிலும் சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
