இந்தியரொருவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுனராக செயற்பட்டு வந்த சங்கர் நாகப்பா ஹங்குட் (வயது 55) என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் சங்கர் நாகப்பா ஹங்குட் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், அவர் தனது மனைவி ஜோதி (46) மற்றும் குழந்தைகள் வருண் (20), கவுரி (16), நிஸ்சால் (13) ஆகியோரை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் தான், இந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தீர்ப்பு குறித்து அவர் கருத்து கூற மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam