அம்பாந்தோட்டை துறைமுக போராட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக விற்பனைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 41 பேருக்கு எதிரான வழக்கு, நேற்று(02.11.2026) அம்பாந்தோட்டை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வழக்கை அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி குற்றப்பத்திரிகைகளை கையளிக்க பிரதம நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 பேர் இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

நேற்றைய விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக்க உள்ளிட்ட 35 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
சுமார் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை நிறைவு செய்து மேல் நீதிமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவையும் நவம்பர் 16ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
you may like this video