அநுரவுக்கு நெருக்கடி கொடுக்கும் சஜித் - அரசியல் மட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற முக்கிய பதவிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.
அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன பலய உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுக்கு பதவிகளை பகிர்ந்தளிப்பதன் மூலம் அதிகாரத்தை நிறுவ ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த நிர்வாகக் குழு நேற்று முடிவு செய்தது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த நிர்வாகக் குழு முதல் முறையாக கூடியது.
நிர்வாகக் குழு
ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த நிர்வாகக் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த முடிவை ஒருமனதாக எடுத்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த உறுப்பினர் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன பலய மற்றும் பிற கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை கொண்ட மன்றங்களில், எதிர்க்கட்சிகள் குழப்பங்களை ஏற்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் அதனை மீறி ஆட்சி அமைக்க முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
