சர்வதேச மன்னிப்பு சபையின் கலப்பு நீதிமன்ற திட்டம்: மறுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இலங்கையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு கலப்பு நீதிமன்றத்தினை நிறுவுவதற்கான யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில், சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளார் நாயகம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான சந்திப்பில் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வடக்கு - கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் தலைவிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நீண்டகால போராட்டம்
இதன்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாக போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தங்கள் கோரிக்கையினையும் அவர்ளின் தற்போதைய நிலையினையும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
சர்வதேச மன்னிப்பு சபையில் எட்டு மாவட்ட உறவுகளின் பிரச்சினை தொடர்பிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள வேலைகள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பபட்டவர்களின் உறவுகள் சர்வதேச மன்னிப்பு சபையிடம் என்னத்தினை எதிர்பாக்கின்றார்கள் என்று கேட்டுள்ளார்கள்.
இதன்போது அவர்களின் எதிர்பாப்புக்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எங்கள் உறவுகள் இராணுவத்திடம் இந்த இடத்தில் கையளித்ததங்கான சாட்சியமளிக்கின்றோம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இலங்கையில் ஒன்றும் கிடைக்காது.
இதனை சர்வதேச பொறிமுறைக்குள் கொண்டுசென்று உண்மையான நீதி பெற்று தரவேண்டும்.
இலங்கையில் விசாரணை
மீண்டும் பல ஆணைக்குழுக்களை உருவாக்கி இலங்கையில் விசாரணைகள் செய்யக்கூடாது என்பதையும் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை அரசாங்கம் எவ்வாறு எங்களை விசாரணை செய்கின்றார்கள்,
புலனாய்வாளர்கள் எவ்வாறு அச்சுறுத்துகின்றார்கள் போராட்டங்களை எவ்வாறு முடக்குகின்றார்கள் என்பது தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் எங்களின் உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கூடியவாறு ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் அவர்கள் காணிகள் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும், சமய மாற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் இதற்கு சர்வதேசம் தான் முடிவெடுத்து தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பிலும் செயலாளர் நாயகத்தினால் கேட்கப்பட்டமைக்கு, இந்த புதிய சட்டங்கள் எங்களை கைதுசெய்யவதற்கும் போராட்டங்களை முடக்குவதற்கும் கையாளப்படும் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளோம்.
இன்றும் கூட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் நீதிமன்ற கட்டளை கொடுத்ததையும்காட்டி எங்களுக்கு இவ்வாறுதான் நடக்கின்றது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதுடன்.
இந்த கஞ்சி ஏன் கொடுக்கின்றீர்கள் என்று கோட்டதற்கு தெளிவானவிளக்கம் கொடுத்தோம். எங்களை உயிர்காத்ததும் காக்கவைத்ததும் இந்த கஞ்சி இறுதி போர் நடைபெற்ற காலத்தில் எல்லா மக்களையும் காப்பாற்றியது என்பதை எடுத்துரைத்தபோது அந்த கஞ்சியினை பற்றி இன்றுதான் தெளிவாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
நாளை முள்ளிவாய்க்கால் நிகழ்வில் மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் கலந்து கொள்வதாகவும் ஊடகங்கள் வந்து கருத்து அறியலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு சபையின் நடவடிக்கை
இலங்கையில் ஒரு கலப்பு நீதிமன்றத்தினை கொண்டுவந்து உங்கள் பிரச்சினையினை தீர்போம் என்று மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் முன்வைத்துள்ளார்.
ஆனால் நாங்கள் கலப்பு நீதிமன்றத்தினை நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு சர்வதேச நீதிமன்றம்தான் தேவை என்பதை தெரியப்படுத்தியுள்ளோம்.
இதேவேளை கலப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதவானை வைத்துத்தான் இதில் வாதாட செய்வார்கள் என்று எங்களிடம் தெரியப்படுத்தினார்.
என்னதான் இருந்தாலும் சட்டத்தரணிகள் இங்கு உள்ளவர்கள்தான் என்பதை வெளிப்படுத்தினோம். சர்வதேச பொறிமுறைதான் தேவை என்பதை வலியுறுத்தினோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |