கொழும்பில் பிரதான வீதிகளை மறித்து தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் (Video)
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கொழும்பில் இலங்கை துறைமுக அதிகார சபையினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
துறைமுக அதிகார சபை ஊழியர்களினால் கொழும்பு பிரதான வீதிகளை மறித்து இன்று (1.3.2023) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் காரணமாக கொழும்பு அப்துல் காதர் வீதி முடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் சுமார் 40 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இன்றைய தினம் காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
