மன்னார் - தலைமன்னார் வீதியில் திறக்கப்படவுள்ள புதிய மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (30) காலை பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
மது விற்பனை நிலையம்
இந்த நிலையில், மன்னார் பிரதேச செயலகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில் தற்போது கொழும்பில் அனுமதி பெற்று இன்னும் சில தினங்களில் குறித்த மது விற்பனை நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நாங்கள் அண்மையில் மன்னர் மது வரி திணைக்களத்திற்கு சென்று கேட்ட போது அவர்களும் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு ஆதரவாகவும் தம்மோடு கடும் தொனியில் கதைத்த தாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதனைச் சுற்றி மக்களின் குடியிறுப்புகள் அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கலாச்சார சீர் கேடு
இந்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார சீர் கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் உடனடியாக அதனை அங்கிருந்து அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
