செப்டெம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் - சென்னை இடையே புதிய விமான சேவை
இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செப்டெம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானத்தை இயக்குகிறது.

முல்லைத்தீவில் பாடசாலை குடிநீர் தாங்கி ஒன்றில் குரங்கின் அழுகிய சடலம்! கேள்விக்குறியாகும் சுகாதார நிலைமை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
ஆரம்பத்தில், வட இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் விமானங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் பயணிகள் படகு சேவையும் சமீபத்தில் மீண்டும் இயக்கப்பட்டது.
'சிவகங்கை' என்று பெயரிடப்பட்ட இந்த படகு, சமீபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நான்கு மணி நேரத்தில் தனது முதல் பயணத்தை முடித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
