எதிர்க்கட்சி இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து கனவிலும் நினைக்கக் கூடாது - ரணில்
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் கனவிலும் நினைக்கக் கூடாது எனவும், ஆட்சி அதிகாரத்தை தற்போது கைப்பற்றினால் அழிவே ஏற்படும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி எந்த விதத்திலாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரும் எண்ணத்தை கைவிட நேரிடும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்காலத்தில் கூட்டணியை அமைத்து, அந்த கூட்டணியின் தலைமை பொறுப்பை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ரணில், இந்த விடயம் குறித்து தனக்கு தனியாக தீர்மானத்தை எடுக்க முடியாது என்பதால், அந்த யோசனையை கட்சிக்கு முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
